வரலாறு படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியாக ரூபாய் பத்துலட்சம் நடிகர் அஜித்துக்கு தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தரவேண்டியிருந்தது.
தன் அடுத்த பட ரிலீஸின் போது அந்த பணத்தை செட்டில் செய்துவிடுவதாக சக்கரவர்த்தி அஜித்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இப்போது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பான காளை படம் ரிலீஸூக்கு முன்பு அஜித் தயாரிப்பாளர் சங்கத்தில் இவ்விசயத்தை தெரியப்படுத்தி பணத்தை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி தயாரிப்பாளர் சங்கமும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடமிருந்து அஜித்துக்கு பணத்தை வாங்கி கொடுத்தது.