நான் கடவுள் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யா அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் சர்வம் படத்தில் நடிப்பது தெரிந்த விசயம்.
இப்படத்தில் ஆர்யாவுக்கு மிகவும் எளிமையான கதாபாத்திரமாம். நீண்ட நாளைக்கு படத்தை இழுக்காமல் மூன்றே மாதத்தில் படத்தை முடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
நடிக்க வந்ததிலிருந்து வேறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆர்யா ஒரு படம் முழுவதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாம்.
அப்படிப்பட்ட கதையோடு இயக்குனர் எவரேனும் ஆர்யாவை அணுகினால் உடனே கால்ஷீட் கொடுத்துவிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.