சல்மான்கா‌னி‌ன் கா‌ஸ்‌ட்‌லி கேரவே‌ன்

புதன், 23 ஜனவரி 2008 (11:12 IST)
கேரவேன் இல்லாமல் இப்போதெல்லாம் பெரிய நடிகர், நடிகைகள் படத்தில் நடிப்பதே கிடையாது.

இந்தி நடிகர் சல்மான்கான் வைத்திருக்கும் கேரவேன் பற்றி கேள்விபட்டதும் கோடம்பாக்கத்து நடிகர், நடிகைகளே ஆச்சர்யபடுகிறார்கள். அவர் சொந்தமாக வைத்திருக்கும் கேரவேனில் நீச்சல்குளம் முதற்கொண்டு பல்வேறு வசதிகள் இருக்கிறதாம்.

பனிரெண்டு மணிக்கு படப்பிடிப்புக்கு வரும் அவர் ஒரு ஷாட் நடித்து முடித்ததும் மதிய இடைவேளை வந்துவிடுமாம். அதற்கு பிறகு அவராக மனது வைத்து கேரவேனிலிருந்து இரு‌ந்து இறங்கி வந்து நடித்தால்தான் ஆச்சு. யாரும் அவரை போய் கூப்பிட முடியாதாம். அதேபோல் பேக்கப்பையும் அவர்தான் சொல்வாராம்.

இப்படிபட்ட ஒருத்தரை வைத்து ஏன் படம் தயாரிக்கிறீர்கள் என்று இந்தி படத்தயாரிப்பாளர்களிடம் கேட்டால், சல்மானை வைத்து படம் தயாரித்தால் கைமேல் 40 கோடி லாபம் தரும். அதனால் அந்த விசயங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம் என்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்