பூ‌ரி‌ப்‌பி‌ல் இரு‌க்‌கிறா‌ர் மது‌‌மிதா

புதன், 23 ஜனவரி 2008 (11:02 IST)
ஒரு வார இதழில் நடிகை மதுமிதா, அறை எண் 305 ல் படக்குழுவினர் தன்னை ஏமாற்றி கஞ்சா கருப்புக்கு ஜோடியாக்கிவிட்டார்கள் என்று செய்தி வெளி வந்திருந்தது.

இக்கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார் மதுமிதா. காரணம் படத்தில் சந்தானத்திற்குதான் மதுமிதா ஜோடி. கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து தானே ஒப்புக்கொண்ட ஒரு விசயத்திற்காக ஏன் வருத்தப்பட போகிறேன் என்கிறார்.

அதுவும் இல்லாமல் பட‌ம் வந்ததும் பாருங்கள் என் கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என்கிறார் மதுமிதா.

வெப்துனியாவைப் படிக்கவும்