ரீ மிக்‌ஸி‌‌ங்‌கி‌ல் ‌பிர‌ச்‌சினை

செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:26 IST)
தமிழில் ரீ மிக்ஸ் படல்களுக்கு முன்னோடி யாரென்று தெரியுமா! இயக்குனர் விக்ரமனும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரும்தான்!

இப்போது ஆளாளுக்கு ரீ மிக்ஸ் போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் ஏற்கனவே இசையமைத்த இசையமைப்பாளருக்கோ பாடகர்களுக்கோ, பாடலை எழுதியவர்களுக்கோ எந்த வித கர்ட்டஸியும் கொடுப்பதில்லை.

இதனால் புலமைப்பித்தன் தொடங்கி பழம்பெரும் ஜாம்பவான்கள் அத்தனை பேரும் ரீமிக்ஸ்க்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

இதை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று இப்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இனி எப்படி மிக்ஸ் பண்ணுவாங்களாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்