யாரடி நீ மோகிணி ரிலீசுக்குப் பின்னர்தான் அடுத்த கதை
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:24 IST)
'பொங்கலுக்கு வந்த ஆக்ஷன் படங்கள் எதுவும் பெரிதாக இல்லை. ஏற்கனவே வெளியான பொல்லாதவன் படம் இன்னும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இது தனுஷுக்கு உற்சாகமான செய்திதான் என்றாலும் இன்னொரு விஷயத்தில் கவலையாக இருக்கிறார்.
தனுஷுக்கு கதை சொல்ல முன்னணி இயக்குனர்கள் பலர் கேட்டிருக்கிறார்கள். பொல்லாதவன் ஆக்ஷன் படம். அடுத்து வெளியாகப்போகிற யாரடி நீ மோகினி அட்சரசுத்தமான குடும்பக்கதை. அது என்னவாகும் எனபது தெரியாது.
படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாகப்போகிறது. அதன் பிறகுதான் அடுத்து என்ன மாதிரி கதையை செல்க்ட் பண்ணுவதென்று தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.