இயக்குன‌ர் அவதா‌ர‌ம் எடு‌க்கு‌ம் ஒளிப்பதிவாளர் ராம்ஜி!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:18 IST)
டும் டும், மனம் பேசியதே, ராம், பருத்திவீரன் தொடங்கி இந்தி, மலையாளம் என எக்கச்சக்க படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் ராம்ஜி.

தற்போது இந்தியில் சங்கீத் சிவனோடு ஒரு படமும் இயக்குனர் செல்வராகவனோடு சேர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ராம்ஜிக்கு நீண்ட காலமாகவே இயக்குனராக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதற்கான முயற்சியில் இப்போது தீவிரமாக இருக்கிறார். பிரேவ் ஹார்ட் படத்தைப்போல் ஒரு படம் தமிழில் பண்ண வேண்டும் என்று அதற்காக கதையையும் எழுதிமுடித்துவிட்டார்.

ஹீரொ யார் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதிரடியாக அறிவிக்க முடிவெடுத்திருக்கிறார்.

சிவாஜி, ரோபோ டைப்பில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிற படமாக இருக்குமாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்