சூர்யா நடித்த பேரழகன் படம் தயாரிக்கும் போதே விஜய், இயக்குனர் ஹரி கூட்டணியில் படத்தை தொடங்குவதாக இருந்தார் ஏவி.எம் பங்குதாரர்களில் ஒருவரான ஏவி.எம்.பாலசுப்ரமண்யம்.
சில காரணங்களால் அப்போதைக்கு அந்தப் படம் இல்லை என்று சொல்லிவிட்டார் விஜய். அப்புறம் சிவாஜி படம் தொடங்கியபோது மறுபடியும் படம் நடிக்கப்போகிறார் என்று ஏவி.எம் தரப்பில் சொல்லப்பட்டது. அபோதும் விஜய் மறுத்துவிட்டார்.
ஒருவழியாக மறுபடியும் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். அதை உறுதி செய்வதற்காக நேற்று விஜயை ஏவி.எம்முக்கு வரச்சொல்லி சிம்ப்பிளாக ஆபீஸ் பூஜை போட்டு அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
ஆனால் இயக்குனர் யார் என்பதை இரண்டு தரப்புமே சொல்லவில்லை!