ஐங்கரண் மூவிஸின் கோ‌லிவு‌ட் கல‌க்க‌ல்

வியாழன், 17 ஜனவரி 2008 (10:54 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ரோபோ படத்தை ஐங்கரண் மூவிஸ் தயாரிக்கப் போகிறது என்பது தெரிந்த விசயம்.

அதேபோல் அஜீத், விஜய் நடிக்கும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கும் பணிகள் மும்பரமாக நடிந்து வருகிறது. ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் வெற்றி கொண்டான் படத்தையும் ஐங்கரண் மூவிஸ் தயாரிக்கிறது.

அத்தோடு நிற்காமல் சிம்பு, தனுஷை வைத்தும் படம் தயாரிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது.

தமிழின் முக்கியமான நடிகர்கள் அனைவரையும் தாங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்கும் பெருந்திட்டத்தில் இருக்கிறது ஐங்கரண் மூவிஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்