நல்ல வாய்ப்புகளை மறுத்த மிருகம் ஹீரோ!

புதன், 16 ஜனவரி 2008 (14:33 IST)
உயிர் சாமி இயக்கி கடந்த தீபாவளிக்கு வந்த படம் மிருகம். இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஆதி.

தெலுங்கு இயக்குனர் ஒருவரின் வாரிசு என்பதை தாண்டி முதல் படத்திலேயே பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று எல்லாரும் பாராட்டியிருக்கிறார்கள்.

அதோடு தங்கள் படங்களில் ஹீரோவாக நடிக்வேண்டும் என்று கேட்டு ஆஸ்கார் பிலிம்ஸ்,ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ், சத்தியஜோதி பிலிம்ஸ் என தமிழில் உள்ள முக்கியமான தயாரிப்பாளர்கள் பலரும் நடிக்கசசொல்லி கேட்டதுக்கு யோசித்து சொல்வதாக மறுத்துவிட்டாராம்.

ஏன் என்று விசாரித்தால் இயக்குனர் சாமியோடு சேர்ந்து இன்னொரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது அவரது விருப்பமாம்.

சாமிக்கு தெரியுமா இந்த தகவல்!

வெப்துனியாவைப் படிக்கவும்