க‌ஜி‌னி ஆ‌ட்க‌ள் மீண்டும் கூட்டணி!

திங்கள், 14 ஜனவரி 2008 (11:57 IST)
சூர்யாவோடு இணைந்து அதிரடியாக கஜினி படத்தை இயக்கிய இயக்குனர் முருகதாஸ்...தற்போது இந்தியில் அமீர்கானோடு அதே கதையை பல மாற்றங்களோடு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழில் அசின் நடித்த கேரக்டரை இந்தியிலும் அவரே நடிக்கிறார். கிட்டத்தட்ட படம் முடியப்போகிறது. அதை தொடர்ந்து மீண்டும் தமிழில் படத்தை இயக்குவதாக இருக்கிறார்.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்தது. ரோபோ படம் தொடங்கியதால் மீண்டும் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருக்கிறார்.

படத்தை முருகாதாஸின் நண்பர் சம்பத் தயாரிக்கிறார். வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்