நடிகர் சல்மான் கானும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனும் இனி ஒரே இடத்தில் அருகருகே இருக்கப்போகின்றனர் சிலைகளாய்...
லண்டன் மடாமி துஸ்சவுட்டில் 14ம் தேதி நடைபெற உள்ள உருவ சிலை திறப்பு விழாவில், சல்மான் கான் அவரது உருவ சிலையை திறந்து வைக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சாருக்கானின் உருவ சிலைகள் உள்ளன. இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் முன்னாள் தோழனான சல்மானின் சிலையும் சில மீட்டர் தூரத்தில் நிறுவப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறை அதிகாரிகளிடம் பிரத்யேக அனுமதி பெற்று லண்டன் செல்கிறார், மானை சுட்ட வழக்கில் தவிக்கும் சல்மான்.