கடந்த ஒரு வாரமாகவே அனைத்து மீடியாக்களிலும் ஹாட் நியூஸ்.. ஷங்கர், ரஜினி கூட்டணியில் ரோபோ படம் தொடங்குகிறார்கள் என்பதுதான்.
இந்த செய்தி வந்த வேகத்திலேயே சில நாளிதழ்கள் படத்தை ரிலையன்ஸ் குரூப் தயாரிக்கப் போவதாக செய்தி போட்டன. அடுத்தடுத்த செய்திகளில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோண் நடிக்கிறார் என்பதுபோல் ஆளாளுக்கு செய்திகள் போட்டுவிட்டனர்.
ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்தான் தயாரிக்கிறது என்பதை அந்த நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார்கள்.
படம் தொடங்கும்போது அறிவிக்கலாம்.. அதுவரை ரகசியமாக இருக்கட்டும் என்று நினைத்திருந்தார்களாம்.ஆனால் தவறான செய்திகள் வந்துகொண்டிருப்பதை பார்த்து அதை மறுக்கவே இப்போது அதிகாரப்பூர்வ செய்தி கொடுத்திருக்கிறார்கள்.
அதில் ரஜினி,ஷங்கர் தவிர..ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தான் ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயின் தீபிகா படுகோண் விசயம் உறுதி செய்யப்படவில்லை!