லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியுள்ள படம் பிடிச்சிருக்கு. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் அசோக். ஏற்கனவே முருகா படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இப்போது நடித்து முடித்திருக்கும் பிடிச்சிருக்கு படம் முடிந்து சென்ஸாரும் ஆகிவிட்டது. படம் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் இயக்குனரையும் ஹீரோவையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
ஹீரோவுக்கு பெரிய ப்ரேக் இருக்கும் என்று சொன்னார்களாம். முருகா படத்துக்கு முன்பு சொல்லாமலே சசி இயக்கத்தில் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு பதினெட்டு நாளோடு அந்தப்படம் ட்ராப் ஆகிவிட்டது.
ஹீரோவுக்கு நடிப்பு வரவில்லை என்று காரணம் சொன்னார்களாம். அதை பிடிச்சிருக்கு படம் உடைக்கபோகிறது என்பதால் உற்சாகமாக இருக்கிறார் அசோக்!