அப்செட்டில் ராமன் தேடிய சீதை யூனிட்!

புதன், 9 ஜனவரி 2008 (12:52 IST)
சேரன் ஹீரோவாக நடிக்கும் படம் ராமன் தேடிய சீதை. பசுபதி, நிதின்சத்யா இருவரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நாகர்கோவில் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியபோது தொடர்ந்து மழை.

அப்புறம் இரண்டு நாட்களுக்கு முன்பு கலெக்டரின் கார் ப‌திவு எண்ணை பயன்படுத்தினார்கள் என்று பிரச்சினை. இப்போது படப்பிடிப்பு ஜீப் மோதி வயதான பெண் ஒருவர் இறந்துபோய்விட்டார்.

அடுத்தடுத்து இப்படி பிரச்சினைகள் நடந்ததால் இயக்குனர் ஜெகன்நாத் உட்பட மொத்த யூனிட்டும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்