கடல்கடக்கும் காத்தவராயன்!

புதன், 9 ஜனவரி 2008 (12:51 IST)
கரண் ஹீரோவாக துரை என்பவர் இயக்கும் படம் காத்தவராயன். கிராமத்தில் இருக்கும் சாராயா வியாபாரியை பின்னணியாக கொண்ட கதை.

அதற்காக சுந்தரா ட்ராவல்ஸ் ராதா அப்புறம் புதுமுக நாயகி ஒருவரும் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டும்தான் பாக்கி.

அதற்காக மொத்த டீமும் வருகிற பத்தாம் தேதி மலேசியாவுக்கு போகிறார்கள். அங்கே போய் மூன்று பாடல்களை எடுக்க திட்டம் வைத்திருக்கிறார்களாம்.

கிராமத்து கதைக்கும் மலேசியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்.. கிராமத்து படத்தை தயாரிப்பவர் மலேசியாக்காரர். அந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தலேன்னா எப்படி என்கிறார்கள்.

எப்படி!?

வெப்துனியாவைப் படிக்கவும்