காதல் திருமணம் செய்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அஜித், ஷாலினி தம்பதிக்கு குழந்தை பிறந்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அஜித்துக்கு தகவல் தெரிவித்தவுடன் முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.
மனைவி குழந்தையோடு போகவேண்டும் என்று நினைத்திருந்தாராம்.ஆனால் சிசேரியன் செய்து குழந்தை பிறந்ததால் ஷாலினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மறுத்துவிட்டார்களாம் டாக்டர்கள்.
அதனால் பில்லா பட தயாரிப்பாளர் சுரேஷ் சகிதம் முதல்வரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
சந்திப்பின்போது பில்லா படத்தை பார்க்கும்படி வேண்டுகோள் வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.