சினிமா நடிகர்களில் வெளிப்படையாக பேசக்கூடிய நடிகர்களில் முதல் ஆள் யாரென்று கேட்டால் தயங்காமல் சத்யராஜ் என்று சொல்லலாம்.
சமீபத்தில் நடந்த வாழ்த்துகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடல்களை பார்த்து விட்டு பாராட்டி பல பேர் பேசினாலும் சத்யராஜ் பேசினதுதான் ஹைலைட்.
நான் இந்த விழாவுக்கு வரும்போது தம்பி பிரபு என்னிடம் தாடி வளர்க்கிறீங்களே என்ன விசயம் என்று கேட்டார். தலைக்கு அடிக்கிறதுக்காக வாங்கின டை பல மாசமா தீராமல் அப்படியே இருக்கு.
தீர்க்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சுதான் தாடி வளர்க்கிறேன் என்று ஜாலியாக ஆரம்பித்தவர்... சினிமாவால் சிலருக்கு லாபம்.
என் தம்பி சீமான் மாதிரி ஆட்களால் சினிமாவுக்கு லாபம் என்று சொல்லி சில உதாரணங்களை சொன்னார். என்.எஸ்.கே.அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொன்னவர்கள்.
அந்த வரிசையில் தம்பி சீமான் இயக்குனராக இருப்பது சினிமாவுக்கு லாபம். எனக்கெல்லாம் சினிமாவால் லாபம் என்று முத்தாய்ப்பு வைத்தார்.