நடிகர் பரத்துக்கு அவரது ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து சின்ன தளபதி என்று பட்டம் தெரிந்து கொடுத்தார்களா இல்லையா என்பது நமக்கு தெரியாது...இயக்குனர் பேரரசுக்கு தெரிந்திருக்கிறது.
தற்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பழனி படம் முடிந்துவிட்டது. பொங்கலுக்கு கமெர்ஷியல் பஞ்சாமிர்தமாக கலந்து கொடுக்கப்போகிறார்.
இளைய தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் அண்ணனுக்கும் தங்கைக்குமான செண்டிமெண்டை வைத்து கதை சொன்னதை அப்படியே திருப்பிபோட்டு அக்காவுக்கும் தம்பிக்குமான கதையாக பழனியை எடுத்து முடித்திருக்கிறாராம்.
இப்போது சொல்லுங்கள் சின்ன தளபதி பட்டம் கொடுத்தது சரிதானே!