ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை அடுத்து சிவாஜி பிலிம்ஸ் பேனருக்கு அஜித் நடித்து கொடுக்கப்போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
சந்திரமுகியை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து படம் எடுக்கிற திட்டத்தில் இருந்திருக்கிறார்கள்.
ரஜினி தரப்பில் இருந்து பதில் இல்லை. ஸோ.. அடுத்த சாய்ஸ் என்று அஜித்தை ஒப்பதம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் பெயர் அடிபட்டது.
அப்புறம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கக்கூடும் என்றார்கள். ரவிக்குமார் சூர்யாவை வைத்து படம் இயக்கவிருப்பதால்... சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம் படத்தை இயக்கும் கௌதம் மேனனை இயக்குனராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.