இயக்குனர் ஷங்கர் அதிரடியான படங்களை இயக்கினாலும் அவரது எஸ்.பிலிம்ஸ் பேனரில் குறைந்த முதலீட்டு படங்களை எடுப்பதை லட்சியமாக வைத்திருக்கிறார்.
அவரிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருந்த அறிவழகன் என்பவரை வைத்து அடுத்து ஒரு படம் தயாரிக்க விருக்கிறார். அதற்காக முற்றிலும் புதுமுகங்களாக வரவழைத்து டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டார்கள்.
இயக்குனருக்கு திருப்தி தரும் வகையில் நடித்த ஆட்களை செலக்ட் செய்து தயரிப்பாளர் ஷங்கரின் டேபிளுக்கு அனுப்பியிருக்கிறார்.
அவருக்கும் ஓகேதான். ஆனால்...கல்லூரி எதிர்பார்த்த அளவு இல்லாததால் புதுமுகத்திற்கு பதிலாக ஏற்கனவே அறிமுகமான ஹீரோவை வைத்து படத்தை ஆரம்பிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.