வசந்தபாலன் இயக்கும் படம் அங்காடி தெரு. இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் நடிக்கிறார் என்பது தெரிந்த செய்தி. படத்தில் கதாநாயகியாக நடிக்க தமிழ் பேச தெரிந்த பெண்ணாக அதுவும் தமிழ் முகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
கற்றது தமிழ் படத்தில் நடித்த அஞ்சலி அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
படத்தில் நெல்லைத் தமிழில் கதாநாயகி பேசவேண்டும். அதற்காக நெல்லை தமிழில் பயிற்சி எடுக்க ஆரம்பித்து விட்டாராம் அஞ்சலி.