விஷாலும் லிங்குசாமியும் மீண்டும் இணைகிறார்கள்
புதன், 26 டிசம்பர் 2007 (10:39 IST)
விஷால் நடித்து வெளி வந்த முதல் இரண்டு படங்களும் வெற்றிப்படமாக இருந்தாலும் அவரது சினிமா கேரியருக்கு அவை எந்த விதத்திலும் உதவும் படங்களாக இல்லை.
அதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த சண்டைக்கோழி படம் அவரை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியதோடு தமிழ், தெலுங்கு இரண்டிலும் மிகப்பெரிய வியாபாரம் உள்ள ஹீரோவாக மாற்றியது.
அப்படியிருந்தும் அந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நூறாவது நாள் விழாவில் கூட ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பி உட்கார்ந்திருந்தார்கள்.
சினிமாவில் சண்டையும் சமாதானமும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பது போல் இந்த இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.
இந்த இணைப்பை செய்து வைத்தவர் தளபதி ஸ்டாலின் வாரிசு உதயநிதி.
யெஸ்..பருத்திவீரன் கார்த்திக்கை வைத்து இயக்கும் படம் முடிந்த கையோடு இந்தப் படத்தை தொடங்கப் போகிறார்கள்.