சரத்குமா‌ரி‌ன் மலேசிய ‌தி‌ட்ட‌ம்!

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (12:16 IST)
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கணும்... அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்று!

அதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.

எப்படி?

வருகிற 21,23 தேதிகளில் மலேசியா, சிங்கப்பூரில் ஸ்டார்நைட் புரொக்கிராம் நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகளை கவனிப்பதற்காக அவர் முன்கூட்டியே அங்கே போக வேண்டும். அதே நேரத்தில் திணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் 1977 படத்துக்கான படப்பிடிப்பு வேலைகளும் இருக்கிறது.

இரண்டு வேலைகளையும் பார்ப்பதற்காக படப்பிடிப்பை மலேசியாவிலேயே நடத்தச்சொல்லி யூனிட்டோடு கிளம்பிப்போய்விட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்