அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் பிலிம் இன்ஸ்டியூட் மாணவரான பவண் இயக்கியுள்ள படம் பழனியப்பா கல்லூரி.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படம் கடந்த முப்பதாம் தேதியே ரிலீஸ் ஆகவேண்டியது. கடைசிக்கட்ட வேலைகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போய்.. ஒரு வழியாக வருகிற 21ம் தேதி ரிலீஸ் பண்ணுகிற ப்ளானில் இருக்கிறார்கள். இதற்கு நடுவே மொத்தப்படத்தையும் முடித்து முதல் காப்பி பார்த்த அன்று படத்தின் எடிட்டருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
படத்திலும் எடிட்டரின் பணி சிறப்பாக இருந்ததாம். இரண்டுக்குமாக சேர்த்து எடிட்டருக்கு 5 பவுனில் செயின் வாங்கிப்போட்டிருக்கிறார்.