காதல் படம் ரிலீஸாகி மூன்று ஆண்டுகள் கழித்து பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள படம் கல்லூரி.
காலதாமதமாக படம் வந்தாலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது படத்துக்கு. படு யதார்த்தமாக இருக்கிறது என்று எல்லோரும் பாரட்டினாலும் இன்னொரு பக்கம் சர்ச்சையக் கிளப்பற சங்கதிகளும் நடந்துகொண்டிருக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை பின்னனியாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.
அதைப் பார்த்து அப்போது ஆட்சியில் இருந்த சிலர் தயாரிப்பாளர் ஷங்கர், பாலாஜி சக்திவேல் இருவர் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்களாம்.