நாகார்ஜுனா நடிக்க வந்தபிறகு அவரது வளர்ச்சியில் தமிழ் டெக்னிஷியன்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.
இதை பலமுறை நாகார்ஜுனாவே சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தமிழ் இயக்குனர்களை தேடித்தெடி படம் பண்ணியவர் இப்போது தமிழ் இயக்குனர்கள் என்றாலே அலறுகிறார். காரணம்?
நான் எப்பவும் தமிழ் டெக்னிஷியன்கள்மீது மரியாதை உள்ளவன்தான். ஆனால் சமீபகாலமாக என்னை ரொம்பவே காலி பண்ணிவிட்டார்கள்.
இனி கொஞ்ச நாளைக்கு தமிழ் இயக்குனர்கள் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று தன் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.