ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் டி.ஆர்.

Webdunia

திங்கள், 10 டிசம்பர் 2007 (16:01 IST)
இளவட்ட ஹீரோக்களில் சிம்பு அதகளப்படுத்துவது மாதிரி இன்னொரு ஏரியாவில் விஜய டி. ராஜேந்தரும் ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அரசியலில் அவ்வப்போது ஆட்டம் காட்டுவதுபோல் சினிமாவையும் விட்டு வைப்பதில்லை என்பதற்கான உதாரணம்தான் இந்த செய்தி. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். கருப்பனின் காதலி, கல்லூரி நாட்கள் என்பது படத்தின் தலைப்பு.

முதல் படத்தை சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது. அதில் தனது இரண்டாவது வாரிசு குறளரசனை அறிமுகப்படுத்துகிறார். கல்லூரி நாட்களில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கவிருக்கிறார்.

இதை சிலம்பாட்டம் படத்தை தயாரிக்கும் எல்.எம்.எம். நிறுவனமே தயாரிக்கிறது. இன்னோரு ஒரு தலை ராகம் என்கிறார்கள் டி.ஆர் வட்டாரத்தில்.

வெப்துனியாவைப் படிக்கவும்