மச்சக்காரனை மறு‌த்த யுவன்!

செவ்வாய், 4 டிசம்பர் 2007 (11:22 IST)
webdunia photoWD
மச்சக்காரன் படம் ரிலிஸாகி தியேட்டரைவிட்டுப் போய்விட்டது. இப்போது இப்படியொரு செய்தி தேவைதானா என்று கேட்காதீர்கள்.

இசையமைப்பாளர் யுவனின் க‌ணிப்பு எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதைத்தான் கொஞ்சம் தாமதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

என்ன..?

மச்சக்காரன் படம் முடிந்து ரீ ரெக்கார்டிங்க்காக யுவனுக்கு படத்தை போட்டுக்காட்டியிருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு யுவன் பயங்கர அப்செட்.

இதுக்கெல்லாம் என்னால் ரீ ரெக்கார்டிங் வாசிக்கமுடியாது என்று கறாராக திருப்பி அனுப்பிவிட்டாராம். கடைசியில் யுவன் ட்ரூப்‌பி‌ல் உள்ள கீ போர்ட் ஆர்ட்டிஸ்டை வைத்து ரீ ரெக்கார்டிங் பண்ணியிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்