தூதுவிட்ட பத்மப்ரியா...மறுத்த தயாரிப்பாளர்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (11:08 IST)
webdunia photoWD
இயக்குனர் சாமியோடு சண்டைபோட்டு தயாரிப்பாளர் சங்கம் வரை பத்மப்ரியா பிரச்சினையைக் கொண்டுபோது ஊருக்கே தெரியும்.

அப்படியிருக்க படம் நல்லா வந்திருக்கிற செய்தி கேள்விப்பட்டு சமாதானத்துக்கு முயற்சிக்கிறார் என்பதையும் சொல்லியிருந்தோம்.

சமீபத்தில் மிருகம் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு விழா நடந்தது. எப்படியாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து மீண்டும் தூதுவிட்டிருக்கிறார்.

சரி...போனால் போகுது வரச்சொல்லுங்க என்று சொல்லிவிட்டார் தயாரிப்பாளர்.

உடனே தனக்கு தன்னோட அப்பாவுக்கு என்று ஆரம்பித்து ஒரு பெரிய லிஸ்டை ரெடி பண்ணி நீட்டி...எல்லாத்துக்கும் டிக்கெட் போடுங்க.. அப்படியே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுடுங்க என்று சொன்னாராம்.

இதுவரை பண்ணிய செலவு போதாதா...வரவேண்டாம் என்று மறுத்துவிட்டது தயாரிப்பாளர் தரப்பு!

இதுவும் நியாயம்தான்!ோ

வெப்துனியாவைப் படிக்கவும்