ஏ.பி.கார்டன் பேனரில் ஏ.சி.ஆனந்தன், பழனிவேல் இருவரும் சேர்ந்து தயாரிதுள்ள படம் ஆட்டோ.
ஆர்யா, பூஜா நடித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட்டுக்கும் வியாபாரம் ஆகிற தொகைக்கும் டேலி ஆகாமல் போனதால் தயாரிப்பாளர் இருவரும் படத்தை ரிலீஸ் பண்ணுவதில் சிக்கலாகிவிட்டது.
சென்னை, என்.எஸ்.சி ஏரியாவை நானே வாங்கி ரிலீஸ்பண்ணுகிறேன் என்று ஆர்யாவும் இரண்டு ஏரியாவை வாங்கினார். அப்படியும் படத்தை ரிலீஸ் பண்ணமுடியாது என்று மொத்தமாக கை விரித்துவிட்டது தயாரிப்பாளர் தரப்பு. வேறு வழியில்லாமல் படத்தை ஆர்யாவே ரிலீஸ் பண்ணித்தருவதாக பொறுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்திலுள்ள விநியோகஸ்தர்கள் அத்தனைபேரையும் வரவழைத்து படத்தை ரிலீஸ் பண்ணுங்க...ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கு நான் பொறுப்பு என்று எல்லா ஏரியாவையும் பேசிமுடித்துவிட்டார்.