எம் மகன் படத்தை தொடர்ந்து பெரிய இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு பேர் ஜெயம்கொண்டான்.
உன்னாலே உன்னாலே வினய் ஹீரோவாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக பாவனாவும் இன்னொரு புதுமுகமும் நடிக்கிறார்கள்.
கண்ணன் என்கிற புதுமுகம் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கான படப்பிடிப்பும் தொடக்கவிழாவும் இன்று காலை ஏவி.எம் ஸ்டுடியோவில் தொடங்கியது.
மணிரத்னம், ஆர்.பி.சௌத்ரி, ஜீவா, பெப்சி விஜயன் என பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.