பத்மப்பிரியா விடும் சமாதான தூது!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (11:41 IST)
உயிர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மிருகம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

டப்பிங்கில் பார்த்த ஆட்கள் படம் பெரிய அளவில் வந்திருப்பதாகச் சொன்ன தகவல் காற்று வாக்கில் படத்தின் கதாநாயகி பத்மபிரியாவின் காதுக்கும் போயிருக்கிறது.

இயக்குனர் என்னை அடித்தார்..செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று பஞ்சாயத்து பண்ணிவிட்டு போனவருக்கு இப்போது வேறொரு பயம் வந்துவிட்டது.

webdunia photoWD
படம் வெளிவந்தால் பத்மபிரியாவுக்கு தேசிய விருது கிடைப்பது நிச்சயம். அதற்கு பத்மப்ரியாவே டப்பிங் பேசினால்தான் உண்டு. அதற்காக தயாரிப்பாளரிடம் போன்போட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

சாமிதான் வரம் கொடுக்கவேண்டும்!