அரசியல்வாதிகளுக்கு இணையாக படங்களில் வார்த்தை விளையாட்டு நடத்திக்கொண்டிருந்த இளைய தளபதி விஜயும், தல அஜித்தும் இப்போது சமாதானமாகிவிட்டார்கள்.
விஜய்யின் அழைப்பை ஏற்று அவரது நீலாங்கரை வீட்டுக்கு தனது மனைவி ஷாலினி சகிதமாக போய்விட்டு திரும்பியிருக்கிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாப்பிக்.
webdunia photo
WD
எப்படி நடந்தது இந்த அதிசயம்? தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் இருவரும் அருகருகே அமர்ந்து விழாவை சிறப்பித்த போட்டோக்கள் அடுத்தநாள் தினசரிகளில் வெளிவந்ததைப் பார்த்து சீனியர் ஸ்டார் ஒருவர் போன் போட்டு பாரட்டியிருக்கிறார்.
இதேபோல் எப்பவும் இருப்பதுதான் உங்களுக்கும் சினிமாவுக்கும் ஆரோக்கியமான விஷயம் என்று சொன்னாராம். அதை தொடர்ந்து விஜய் போனில் அஜித்துக்கு அழைப்பு விடுக்க...நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் இருவரும் குடும்பத்தோடு சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார்கள்.