பல பிரச்னைக்கு பிறகு எட்டப்பன் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை அன்றே படப்பிடிப்பும் ஆரம்பமானது.
அன்றைக்கே பிரச்னை ஆரம்பித்ததுதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது. படப்பிடிப்பில் கேரவேனுக்கு ஏற்பாடு செய்யவில்லையாம். இதனால் படத்தின் கதாநாயகன் ஸ்ரீகாந்த் மதியத்துக்கு மேல் கோபித்துக்கொண்டு போய்விட்டாராம்.
உடனே கவுன்சிலுக்கு போய் பஞ்சாயத்து வைத்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர். நடிகர்,நடிகைகள் கேரவேன் கேட்க கூடாது என்று ஏற்கனவே கவுன்சில் கட்டளை போட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.