பொங்கலைத் தாண்டும் தசாவதாரம்

Webdunia

செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:03 IST)
தசாவதாரம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றார்கள். ஆனால் உண்மையில் பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பு இல்லையாம்.

சிவாஜி படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில்தான் கிராபிக்ஸ் இடம் பெற்றது. தசாவதாரம் படத்தில் காட்சிக்கு காட்சி கிராபிக்ஸ்தானாம்.

webdunia photoWD
படத்தில் கமலஹாசனுக்கு பத்து வேடம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு காட்சிகளிலும் குறைந்தது ஐந்து, ஆறு கமல் வருவது போல் இருக்கிறதாம்.

அதற்காக ஒவ்வொரு காட்சிக்கும் கிராபிக்ஸ் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நிறைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காட்சிகளை செய்துவருகிறார்களாம்.

இருந்தாலும் பொங்கலுக்கு வேலை முடியாது என்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.