யோகா குரு பாரத் தாகூரை நேற்று பிரபல நடிகை பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூமிகா. இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
இவருக்கும் மும்பையை சேர்ந்த யோகாசன குரு பாரத் தாகூருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. நீண்ட காலமாக இவர்கள் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்தம் தெரிவித்தனர். இதையடுத்து இவரும் அண்மையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பூமிகா-பாரத் தாகூர் திருமணம் நேற்று மராட்டிய மாநிலம் நாசிக் அருகேயுள்ள தியோடலாலி என்ற இடத்தில் நடந்தது. அங்குள்ள ஒரு குருத்வாராவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் புதுமணத் தம்பதியரை வாழ்த்தினார்கள்.