தமிழில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ரகுவரன். தனது சொந்த பிரச்னை காரணமாக சமீபகாலமாக படங்களில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்தார்.
இப்போது பிரச்னையிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறி படங்களில் தலைகாட்ட துவங்கிவிட்டார். தற்போது தொடக்கம் என்ற படத்தில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் வேடத்தில் ரகுவரன் நடிக்கிறார்.
முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடலை தன் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். 'எதுதான் முடியாது? உன்னால் எதுதான் முடியாது? என்று இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடலை பாடி அசத்தியிருக்கிறாராம்.