தொலைக்காட்சியில் நடக்க இருக்கும் ஆடியோ ரிலீஸ்

Webdunia

ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (14:31 IST)
முதன்முறையாக ஒரு திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸை தொலைக்காட்சி ஸ்டூடியோவில் நடத்தி அதை நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

ஜீவா நடிக்கும் ராமேஸ்வரம் படத்தின் ஆடியோ வெளியீட்டை சன் ஸ்டூடியோவில் நடத்தி அப்போதே நேரடியாக ஒளிபரப்ப போகிறார்கள். அந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தில் பாடிய பாடகர்கள் படத்தில் இடம்பெறும் பாடல்களை பாடுவார்கள்.

அதோடு படம்பிடிக்கப்பட்ட பாடல் காட்சியின் க்ளிப்பிங்ஸூம் இடம்பெற இருக்கிறது. இப்படி நேரடியாக படத்தின் ஆடியோவை தொலைக்காட்சியில் வெளியிடுவது இதுதான் முதல்முறை.

வெப்துனியாவைப் படிக்கவும்