செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கார்த்தி, பருத்திவீரன் கதாபாத்திரத்தின் உடல் மொழியை (பாடி லாங்வேஜ்) மாற்ற முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டாராம்.
செல்வராகவன், கார்த்தியை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி இப்போதுதான் ஒரு வழிக்கு கொண்டு வந்திருக்கிறாராம்.
ஆனால் கார்த்தியின் கெட்டப் வெளியே தெரியாமல் ரகசியம் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். பத்திரிகை நிருபர்கள் கார்த்தி புகைப்படத்தை கேட்டால் அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள் அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மறுத்துவிடுகிறாராம்.