படப்பிடிப்பு தளத்தில் பட யூனிட்டை கைவிட்டு ஓடிய தயாரிப்பாளர்!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (14:20 IST)
தெனாவெட்டு படத்தின் படப்பிடிப்பு பண்ருட்டியில் நிறைய பொருட்செலவில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்து.

படத்தின் தயாரிப்பாளர் ஈ.எல்.கே. நிறுவனத்தினர் சவுண்ட் பார்ட்டி என்றார்கள். நேற்று திடீரென்று தெனாவெட்டு படத் தயாரிப்பாளர் குழுவினர் படப்பிடிப்பு தளத்திலிருந்து காணாமல் போய்விட்டார்கள். பட யூனிட்டைச் சேர்ந்த பலரிடம் ஷூட்டிங் பேக்கப் என்பதைக்கூடச் சொல்லாமல் எஸ்கேப்பாகி இருக்கிறார்கள்.

அதற்குப்பின்தான் காரணம் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த பணம் இல்லையாம். பத்து நாட்களாகவே பட யூனிட்டில் வேலை செய்தவர்களுக்கு பேட்டாகூட தரவில்லையாம். பணம் பற்றாக்குறை இருக்கும்போது குறைவான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டியதுதானே என்று யூனிட்காரர்கள் புலம்புகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்