வடிவேலுவின் காமெடி காட்சியை வெட்டச் சொல்லும் சூர்யா

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (13:11 IST)
வேல் படத்தில் வடிவேலுவின் காமெடி நிறைய நேரம் வருகிறதாம். இதனால் படத்தின் ஹீரோ சூர்யா வடிவேலு வரும் காட்சிகளை குறைக்க சொல்கிறாராம்.

இதனை கேள்விபட்ட வடிவேல் கொதித்து போய்விட்டாராம். என்னுடைய காட்சிகளில் கைவைத்தால் டப்பிங் பேசமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம் வடிவேல்.

அதையும் மீறி காட்சிகளை கட் பண்ணினால் ஹரி இயக்கத்தில் நடிக்கமாட்டேன் என்று சொல்லி பயமுறுத்திக் கொண்டிருக்கிறாராம்.

சூர்யா பேச்சைக் கேட்பதா? வடிவேலு பேச்சைக் கேட்பதா? என்று குழம்பிபோய் இருக்கிறாராம் ஹரி.

வெப்துனியாவைப் படிக்கவும்