சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து விலகிய ஒளிப்பதிவாளர்

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (12:25 IST)
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திற்கு விநோத் என்பவர் ஒளிப்பதிவு செய்து வந்தார். இவர் பாலிவுட்டில் பிஸியான கேமராமேனாம்.

தசாவதாரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இவரைக் கேட்டிருக்கிறார்கள். நான் பிஸி என்று மறுத்துவிட்டாராம். எப்படியோ சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

கொஞ்சநாள் இவர் ஒளிப்பதிவு செய்து வந்தார். இப்போது மீண்டும் பாலிவுட் படத்தில் பிஸியாகிவிட்டதால் சந்தோஷ் சுப்ரமணியத்திற்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டாராம்.

இவருக்கு பதிலாக கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பீஷ்மர் படத்தில் ஒளிப்பதிவாளராக
பணிபுரிந்தவர். இவரை சிபாரிசு செய்தது ஒளிப்பதிவாளர் விநோத்தானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்