தருண்கோபிக்கும் சிம்புவுக்கும் இடையே தொடரும் பிரச்னை!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (13:26 IST)
காளை பட இய‌க்குன‌ர் தரு‌ண்கோ‌பி‌க்கு‌ம் நடிக‌ர் ‌சி‌ம்பு‌க்கு‌ம் இடையே ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

தருண்கோபி இயக்கத்தில் காளை படத்தில் நடிக்கும் சிம்பு ஆரம்பத்தில் இயக்குனரோடு சமாதானமாகத்தான் போனாராம்.

ஆனால் தருண்கோபி படப்பிடிப்பில் ஏகத்துக்கு பந்தா காட்டியிருக்கிறார். பொறுமையாக இருந்த சிம்பு ஒரு கட்டத்துக்குமேல் என்கிட்டயே உன் வேலையை காட்டுறியா என்று சொல்லி படப்பிடிப்பை பேக்கப் செய்துவிட்டு சென்னை வந்துவிட்டார்.

தருண்கோபி சென்னையில் சிம்புவை சந்தித்து பிரச்னையை பேசப் போயிருக்கிறார். பேசபபோன இடத்தில் இருவருக்கும் பெரிய சண்டையாகி பிரச்சனை பெரிதாகிவிட்டதாம்.

சிம்புவிடம் பேசி சமாதானமாகி இயக்குனர் திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்தாராம் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. ஆனால் நினைத்ததற்கு மாறாக அவர்களின் சண்டை பெரிதாக இனி எப்போது படப்பிடிப்பை தொடங்குவது என்ற கவலையில் இருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்