சதுரங்கத்தை வெளியிடத் துடிக்கும் கரு. பழனியப்பன்!

Webdunia

வியாழன், 13 செப்டம்பர் 2007 (12:48 IST)
எஸ்.எஸ். துரைராஜ் இயக்கத்தில் கரு. பழனியப்பன் இயக்கிய படம் சதுரங்கம். இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்கள்.

படம் முடிவடைந்து வருச கணக்காகியும் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட
பல்வேறு பிரச்னை காரணமாக படம் வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது.

இந்தப் படத்திற்கு பினகரு. பழனியப்பன் இரண்டு படத்தை இயக்கிவிட்டார். இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்காக தன்னுடைய சொந்த செலவில் பத்திரிகையாளர்களுக்கு இப்படத்தை போட்டுக் காட்டி வருகிறார். அவர்கள் படத்தை பற்றி நன்றாக எழுதினால் யாராவது சதுரங்கம் படத்தை ரிலீஸ் செய்ய உதவிபுரிவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இயக்குனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்