கமல் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாராம், சிவாஜி படத்தின் பட்ஜெட்டை தாண்டுமாம். படத்தின் வசன காட்சிகள் முடிந்துவிட்டனவாம். இதுவரை படத்திற்கு 40 கோடி செலவாகி இருக்கிறதாம்.
இன்னும் இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படம்பிடிக்க வேண்டியிருக்கிறதாம். இதனால் படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளிவராது. அதோடு படத்திற்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அதிகம் இருப்பதால் பொங்கலுக்கு படம் ரிலீஸாவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
படத்தின் பிஸினெஸ் சிவாஜி அளவிற்கு சொல்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அந்த விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குவதால் படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.