புதுமுக இயக்குனர் பிரபாகர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் வில் படத்தை தயாரிப்பதாக இருந்தது.
உடல் ஊனமுற்ற இளைஞனாக வரும் ஹீரோவின் கதாபாத்திரம் சூப்பராக இருப்பதாகச் சொல்லி படத்தை ஆகா ஓகோவென்று புகழ்ந்தார் சூர்யா. தயாரிப்பாளர் சக்கரவர்த்தியும் படத்தின் கதையை புகழ்ந்து பிரேம்ஜி இசையில் இரண்டு பாடல்களில் கம்போஸிங்கையும் முடித்துவிட்டார்கள்.
15 ஆம் தேதி படப்பிடிப்பு என்ற நிலையில் இயக்குனர் பரபரப்பாக லொகேஷன் தேடிக்கொண்டிருந்தார். திடீரென்று கதையை திரும்பக் கேட்ட சூர்யா திரைக்கதை சரியாக இல்லை என்று சொல்லி படத்தை டிராப் செய்துவிட்டார்.