கில்லி படத்திற்கு பிறகு தரணி, த்ரிஷா, விஜய் மூவரும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். அடிக்கடி ஸ்டார் ஹோட்டலில் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.
அதன் பிறகு விஜய் படத்தில் த்ரிஷா தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார். குருவி படத்திலும் த்ரிஷாதான் கதாநாயகி என்றிருக்க நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள்.
இந்நிலையில் ஒரு பார்ட்டியில் தரணியை சந்தித்த த்ரிஷா என்னை ஏன் கதாநாயகியாக போடவில்லை என்று கேட்டு வெளுத்து வாங்கிவிட்டாராம்.
பிறகு தரணி விஜயிடம் சமாதானம் பேசி த்ரிஷாவையே ஒப்பந்தம் செய்து ஃபோட்டோ ஷூட்டும் எடுத்துவிட்டார். இவர்கள் ஊடலுக்கு நான்தான் பகடைக்காயா என்று நயன்தாரா கொதித்துப் போய் இருக்கிறாராம்.