பொறுக்கித்தனமான தலைப்புகளுக்கு தடை

கெட்டவன், பொறுக்கி என படங்களுக்கு தலைப்பு வைக்கிறோம் என்று மிகமோசமான தலைப்புகளை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் கோடம்பாக்கத்துகாரர்கள்.

தமிழில் பெயர் இருந்தால் போதும் அரசின் சலுகை கிடைக்கும் என்று இஷ்டத்துக்கு பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படியே போனால் இருக்கின்ற கெட்ட வார்த்தைகளில் எல்லாம் பெயர் வைத்துவிடுவார்கள் என்று, இந்த மாதிரி பெயர் வைத்தால் எந்த சலுகையும் கிடைக்காது என்று அரசின் மேலிடத்திலிருந்து சொல்லிவிட்டார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கெட்டவன், பொறுக்கி படங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றிருக்கிறார். தூய தமிழில் பெயர் வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில் பெயர் வைக்காமல் இருந்தால் சரி!

வெப்துனியாவைப் படிக்கவும்