சிம்பு கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் காளை மற்றும் கெட்டவன் படங்கள் கிடுகிடுவென்று வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் சிம்புதானாம்.
முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார். திடீரென்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு போய்விடுவார். அதெல்லாம் பழைய கதை. இப்போது நல்ல பிள்ளையாக மாறி ஒரு நாள் கூட வேஸ்ட் பண்ணாமல் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட போது கூட ஷூட்டிங்கை கேன்சல் செய்ய முடியாது என்று வரமறுத்துவிட்டாராம். என்னைப்பத்தி எல்லோரும் தவறா பேசுறாங்க. அதை இல்லை என்று நிரூபிக்க இந்த இரண்டு படத்தையும் உடனடியாக முடிக்க வேண்டும் என்று காரணம் சொல்லி இருக்கிறார் சிம்பு.